கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்

புதன், 9 நவம்பர், 2016

பிராமணன் செய்வது சரியா இது முறை மீறுவதாகாதா



வணக்கம் தமிழ் உறவுகளே!!!!
எங்களிடம் இருக்கும் கேள்வியை   தங்களிடம் முன்வைத்துக்கொள்கின்றோம்.
அந்த ஐயம் என்னவெனில் சைவ முறைப்படி திரு நீறு கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சில விதி முறையுள்ளது. என சைவத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது

அது என்னவெனில் ஆலயத்தில் உள்ள குருக்கள் மார் வலதுகைப்பெருவிரலும் சுட்டுவிரலும் சேர்த்து கிண்ணத்தில் உள்ள திருநீற்றை எடுத்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குக்கொடுக்க வேண்டும்.
அந்த திருநீற்றை பெறுபவர்கள் இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை வைத்து வாங்க வேண்டும்.


வாங்கிய பின் அந்த திருநீற்றை வலது உள்ளங்கையில் இருந்து இடது உள்ளங்கைக்கு மாற்ற வேண்டும்.


அதன் பின்னரே வலது கை மூன்று விரலால் நெற்றியில் அணிய வேண்டும். இவ்வாறு முறை இருக்க தமிழர்கள் செல்லும் ஆலயங்களில் பூசை செய்ய வரும் சில பூனூல் தரித்த குருக்கள்மார் கிண்ணத்தில் உள்ள திரு நீற்றை அவர்களின் வலது கைப்பெரிவிரலால் தொட்டு
ஆலயத்துக்கு வரும் ஆண் பெண் இரு பாலருக்கும் நெற்றியில் இவர்களே பூசிவிடுகின்றார்கள்.


இது எந்த விதிமுறையில் உள்ளது??? இது சரியான ஒன்றா?

கணவனோ மனைவியோ விரதம் இருக்கும்போது கணவன் மனைவியை தொடக்கூடாது மனைவி கணவனை தொடக்கூடாது  என ஒரு நடை முறை இருக்கும் போது விரதகாலத்தில் இந்த பூனூல் போட்டவர்கள் கை படலாமா? சகோதரிகளே சகோதரர்களே  சிந்தியுங்கள்.


உங்கள் கருத்தை பகிருங்கள் நண்பர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.